KLK Bar 
மாவட்ட செய்திகள்

மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள்

நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் கீரனூர் ஏரியில் பள்ளம் தோண்டி மதுவை ஊற்றி போலீஸார் அழித்தனர்.

Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 7 ஆயிரத்து 200 மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். காலாவதியான இந்த மதுபாட்டில்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் கீரனூர் ஏரியில் பள்ளம் தோண்டி மதுவை ஊற்றி போலீஸார் அழித்தனர்.