நகை கடை கொள்ளை நியூஸ்தமிழ்24x7
மதுரை

நகை கடை கொள்ளை, மீட்கப்பட்ட நகைகள், திருடன் சிக்கியது எப்படி?

மதுரை தனிஷ்க் ஜூவல்லரியில் இருந்து தனி ஆளாக 11 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

Azhagiri Arumugam

Money Heist திரைப்பட பாணியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் சிக்கியது எப்படி? காட்டிக் கொடுத்தது யார்? கொள்ளையடித்த நகைகள் எங்கே?

கையில் டாட்டூ

சிக்கிய திருடன், நகைகள் மீட்பு

மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் இருந்து 11 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சியாக தலைமறைவாக இருந்த இளைஞர் வசமாக சிக்கியதோடு, நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன.

கையில் இருந்த டாட்டூ முதல் மாஸ்க் வரை

தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு நகைகள் வாங்குவது போல் நோட்டமிட்டு கொள்ளையடிப்பதற்கு முன்பே எந்தெந்த நகைகளை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என திட்டமிட்ட இளைஞன் கையில் இருந்த டாட்டூவை மறைக்க மறைந்து வசமாக சிக்கினான்.

போலீசாரின் விசாரணை ஒரு பக்கம் தீவிரமாக, மறுபக்கம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

நிஷாந்த் கைது

ஹாலிவுட் பட பாணியில்...

தோழியான மீனாட்சியின் கடனை தீர்க்க ஹாலிவுட் திரைப்படமான Money Heist பாணியில் நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் முதலில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகிய இருவரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்த போலீசார் 5 கிலோ தங்க நகைகளை மீட்டனர்.

தலைமறைவாக இருந்த நிஷாந்தை அவருடைய செல்போன் எண் வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த 5 நாட்களாக பைக், வாடகை கார் மற்றும் பேருந்து என மாறி மாறி சேலம், தருமபுரி, பெங்களூரு என ஊர், ஊராக சுற்றி வந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த போது போலீசாரிடம் வசமாக சிக்கினான்.

ஓட்டுநர் தகவல்

பேருந்தை சுற்றி வளைத்து...

மங்கி குல்லா மற்றும் மாஸ்க் அணிந்தபடி நிஷாந்த் பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஓட்டுநர் உடனே அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்க சேஷம்பட்டி என்ற இடத்தில் பேருந்தை சுற்றிவைத்தனர். போலீசாரை பார்த்ததும் ஜன்னல் வழியாக தப்ப முயன்ற போது கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தகவல் அறிந்த மதுரை தனிப்படை போலீசார் தருமபுரிக்கு விரைந்து சென்று அங்கேயே விசாரணை மேற்கொண்டனர். அப்போது 6 கிலோ தங்கத்தை எங்கே பதுக்கி வைக்கப்பட்டது என்பதை அறிந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மதுரைக்கு அழைத்து சென்றனர்.

நிஷாந்த் தந்தை சுரேஷ் கைது

நகைகள் சரி பார்ப்பு...

கபாலீஸ்வரி கோவில் மலை அடிவாரத்தில் நகைகள் பதுக்கி வைத்திருந்த நிலையில், அதனை பறிமுதல் செய்து பின்னர் மதுரை எஸ்.எஸ்.காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே நகைகடையில் இருந்து எடை மெஷின் கொண்டு வரப்பட்டு அனைத்து நகைகளும் சரியாக உள்ளதா? என போலீசார் சரிபார்த்தனர்.

முன்னதாக மீனாட்சியின் வாடகை வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், மூன்றாவது முறையாக அவருடைய தாய் மற்றும் அண்ணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

விசாரணை தீவிரம்

வீடியோவைக் காண...