Dgl mango rate reduced 
மாவட்ட செய்திகள்

விலை வீழ்ச்சியால் மாம்பழ விவசாயிகள் கவலை மரத்திலேயே பழங்கள் அழுகி வீணாவதாக வேதனை..!

விலை வீழ்ச்சியால் மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடுவதால் பழங்கள் அழுகி வீணாவதாக திண்டுக்கல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Srini Vasan

விலை வீழ்ச்சியால் மாம்பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடுவதால் பழங்கள் அழுகி வீணாவதாக திண்டுக்கல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, மருதாநதி அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு அதிக விளைச்சல் இருந்தும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கவலை தெரிவித்தனர்.