சென்னை தண்டையார்பேட்டை நேருநகர் பகுதி சாலையோரத்தில் மூட்டை, மூட்டையாக கொட்டி வைக்கப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கையுறை, டியூப் உள்ளிட்ட மருத்துக்கழிவுகளை கொட்டி விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.