திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள மேல் சமயபுரம் மகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செல்வ கணபதி, மாசி பெரியசாமி, மதுரை காளியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கும் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.