36 
மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு படிப்படியாக அதிகரித்து வரும் நீர்வரத்து.. 9,683 கன அடியிலிருந்து 12,819 கன அடியாக உயர்வு

சேலம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 9 ஆயிரத்து 698 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று விநாடிக்கு 12 ஆயிரத்து 819 கன அடியாக அதிகரித்துள்ளது.

Srini Vasan

சேலம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 9 ஆயிரத்து 698 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று விநாடிக்கு 12 ஆயிரத்து 819 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்படி அணையின் நீர் மட்டம் 110. 03 அடியாகவும், நீர் இருப்பு 78.45 டி.எம்.சியாகவும் உள்ளது.அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.