திருவள்ளூரில் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
அரக்கோணம் வழியாக செல்லும் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் ரயில் நிலையத்திலேயே செய்வதறியாது தவித்தனர்.
தகவல் உதவி மையத்தின் மூலம் விவரங்களை அறிந்த போதிலும் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.