Murugan kovil festival 
மாவட்ட செய்திகள்

வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து திரளான பக்தர்கள் தரிசனம்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலையிலேயே மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், மாலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.