கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கிருஷ்ணன் புதூர் முத்தாரம்மன் கோவிலில், மகிஷாசுர சம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு அவதாரங்கள் எடுத்து மகிஷாசுரன் முன்னே செல்ல, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதான சாலை வழியாக துரத்திச் சென்ற முத்தாரம்மன், திருமலை முருகன் கோயில் அடிவாரத்தில் வைத்து வதம் செய்தார்.