7 
மாவட்ட செய்திகள்

நாமக்கல் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க செயலி

உணவு டெலிவரி செய்வதற்காக நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் புதிய செயலியை பூஜையுடன் தொடக்கி வைத்தனர்.

Web Team

உணவு டெலிவரி செய்வதற்காக நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் புதிய செயலியை பூஜையுடன் தொடக்கி வைத்தனர்.

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, Zomatoவில் 35 சதவித கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டி கடந்த வாரம் நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மூலமாக அந்நிறுவனங்களில் ஆர்டர் எடுப்பதில்லை என முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து, ZAAROZ என்ற செயலியை நாமக்கலில் அறிமுகப்படுத்தி, ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்து தொடக்கி வைத்தனர்.

இதற்காக 50க்கும் மேற்பட்ட டெலிவரி ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.