மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்கள் மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் பிற்பகல் நடைபெற்ற தேர்வின் போது கனமழை காரணமாக மின் தடை ஏற்பட்டது.
இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு மாணவர்கள் முறையாக தேர்வு எழுத முடியாத நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்ட நீதிபதி அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என தடை விதித்து விசாரணையை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.