18 
மாவட்ட செய்திகள்

சிலையை திருடிய வடமாநிலத்தவர்கள்.. புகாருக்கு முன்பே பிடித்து போலீஸ் அதிரடி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர்.

Srini Vasan

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வழக்கம் போல் கோயிலுக்கு சென்ற பூசாரி சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே போலீசார் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கவே, போலீசார் துரிதமாக செயல்பட்டு திருட்டில் சம்பந்தப்பட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.