புதுச்சேரியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகூர் பகுதியை சேர்ந்த முதியவர் ராதாகிருஷ்ணன், அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இதன் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து தலைமறைவான ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து மூலம் 3 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு முதல்கட்டமாக 50,000 ரூபாய் வாங்கி தமக்கு 20,000 ரூபாய் கொடுத்ததாக, சிறுமியின் தந்தை, தனது நண்பர்களுடன் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.