திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 12 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 42 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், யாகபுரம் ஒத்தக்கடை அருகே அதிகாலை 2 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி, மின்கம்பத்தில் மோதியதால், மின் வயர்கள் அறுந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.