முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பாக்குடி ஒன்றிய திமுக மற்றும் பாப்பாக்குடி இளைஞரணி திமுக சார்பில் முக்கூடல் அருகே மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதனை திமுக தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு, குதிரை வண்டி உள்ளிட்ட பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த விழாவில், நெல்லை திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.