வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மதுரை கூடலழகர் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சுவாமி எழுந்தருள, இரவு 7.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுந்தர்ராஜ பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க பக்தர்களுக்கு காட்சியளித்தார்.