வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்செந்தூர் அருகே வனதிருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.