61 
மாவட்ட செய்திகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மணிகள்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்த நிலையில், மூட்டைக்கு 60 ரூபாய் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Web Team

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்த நிலையில், மூட்டைக்கு 60 ரூபாய் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

வைரவநத்தம் நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதியின்றி நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால், அவற்றை உலர்த்த ஆட்களை வைத்து கூலி வழங்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனைப் பயன்படுத்தி திமுக கிளை செயலாளர் நாகமலை என்பவரும் அதிகாரிகளும் மூட்டைக்கு 60 ரூபாய் முதல் 80ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் பணம் பறிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.