நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடு முழுவதும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஆரணி நெல்கொள்முதல் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யாதது குறித்து நியூஸ் தமிழ் செய்தி ஒளிபரப்பியது.
இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் நடைபெற்று வருகின்றன.