Thirubhuvanm temple event 
மாவட்ட செய்திகள்

சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு பால்குடம், காவடி ஊர்வலம்

தாராசுரம், வளையப்பேட்டை வழியாக சுவாமிநாத கோயிலுக்கு வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Web Team

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் கார்த்திகை சோமவார காவடி கமிட்டி சார்பில் நடைபெற்ற பால்குட, காவடி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் சுமந்து சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பால்குடம், பன்னீர், சந்தனம், தயிர் காவடிகள் உள்ளிட்டவற்றை சுமந்து கொட்டும் மழையிலும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அம்மாசத்திரம், செட்டிமண்டபம், தாராசுரம், வளையப்பேட்டை வழியாக சுவாமிநாத கோயிலுக்கு வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.