RPT Village head issue 
மாவட்ட செய்திகள்

கண்ணீர் விட்டு கதறி அழுத ஊராட்சி மன்ற தலைவி

மனு உளைச்சலுக்கு ஆளாக்குவதாக ஊராட்சி மன்ற தலைவி சரஸ்வதி குமார் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் ஊராட்சி மன்ற செயலாளரும், ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவரும் சாதியை காரணம் காட்டி, பட்டியலின சமூகத்தை சேர்ந்த தன்னை புறக்கணித்து மிகுந்த மனு உளைச்சலுக்கு ஆளாக்குவதாக ஊராட்சி மன்ற தலைவி சரஸ்வதி குமார் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவி சரஸ்வதியின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி செயலாளர் வாசுதேவன் ஆகியோர் வளர்ச்சி திட்டப் பணிகளில் முறைகேடு செய்வதாக சரஸ்வதி குமார் தெரிவித்தார்.