CHN Urban aqure parking issue 
மாவட்ட செய்திகள்

அர்பன் ஸ்கொயர் பகுதியில் அத்துமீறும் தனியார் நிறுவனம் நெடுஞ்சாலை துறை இடங்களை ஆக்கிரமித்து பார்க்கிங் கட்டண வசூல்..!

சென்னை கிண்டி கத்திப்பாராவில் நேரு சிலை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள்

Srini Vasan

சென்னை கிண்டி கத்திப்பாராவில் நேரு சிலை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள், அது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொழுதுபோக்கு தலமாக திகழ்ந்து வரும் கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர் பகுதியை பராமரிக்க டெண்டர் எடுத்துள்ள தனியார் நிறுவனம், அதனை சுற்றி அனுமதிக்கப்பட்ட இடங்களில் வாகனம் நிறுத்துபவர்களிடம் கட்டணம் வசூலித்து வருகிறது.

அதனோடு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களையும் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதோடு, அதனை தட்டிக் கேட்போரை தரக்குறைவாக பேசி மிரட்டுவதாக கூறப்படுகிறது.