தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஏரல் தரைப்பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அருகிலேயே உயர்மட்ட பாலம் இருப்பதால், போக்குவரத்து எதுவும் தடைபடவில்லை. இருப்பினும் கடந்த முறை வெள்ளம் ஏற்பட்ட போது உயர்மட்ட பாலத்தின் வடக்குப்பகுதி துண்டிக்கப்பட்டதால், ஏரல் வழியாக திருச்செந்தூர், திருநெல்வேலி செல்ல இந்த தரைப்பாலம் தான் கைகொடுத்தது என்பதால், அரசு இதனை கைவிடக்கூடாது என்றும், விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.