hosipital 
மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

மருத்துவர் இல்லாததால் வரிசையில் காத்திருப்பு, உடல்நிலை சரியில்லாமல் தரையில் அமர்ந்த அவலம்

Web Team

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் இரண்டு மணி நேரமாக வரிசையில் காத்திருந்த நோயாளிகள், மிகுந்த சிரமம் அடைவதாக கவலை தெரிவித்தனர். நாள்தோறும் விருதாச்சலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் காலை 9 மணிக்கு வரவேண்டிய மருத்துவர் 11மணி ஆகியும் வரவில்லை எனவும், உடல்நிலை சரியில்லாமல் தரையில் அமர்ந்து நீண்ட நேரம் காத்திருப்பதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டினர்.