Elephant sugarcane vehicle follow 
மாவட்ட செய்திகள்

கரும்பு லாரியை வழிமறித்து துரத்திய யானை காரையும் முட்டித்தள்ளியதால் மக்கள் கடும் அச்சம்

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கரும்பு லாரியை வழிமறித்ததோடு அதனை இடைவிடாது துரத்திய யானை, பின்னால் வந்த காரையும் முட்டியதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

Web Team

ஈரோடு மாவட்டம், ஆசனூர் வனப்பகுதியில் கரும்பு லாரியை யானை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கரும்பு லாரியை வழிமறித்ததோடு அதனை இடைவிடாது துரத்திய யானை, பின்னால் வந்த காரையும் முட்டியதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.