KLK ACCIDENT 
மாவட்ட செய்திகள்

லாரியின் டீசல் டேங்க் மீது கார் மோதி விபத்து டீசலை போட்டி போட்டு பிடித்துச் சென்ற மக்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர்களை மீட்காமல் டீசலை பிடித்துச் சென்ற பொதுமக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர்களை மீட்காமல் டீசலை பிடித்துச் சென்ற பொதுமக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியிலிருந்து டேங்கர் லாரி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. சேந்தமங்கலம் ஜிஎஸ்டி-சாலையில் லாரி சென்றபோது பின்னால் வந்த கார் லாரியின் டீசல் டேங்க் மீது மோதியது.

விபத்தில் லாரி மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் ஓட்டுநர்களை மீட்காமல் டீசலை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.

பின்னர் வந்த போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.