RMD Traffic 
மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையால் ராமேஸ்வரத்தில் குவியும் மக்கள்

தனுஷ்கோடி சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்துள்ள வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

Manigandan Raja

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சபரி மலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் சேர்ந்துள்ள நிலையில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்துள்ள வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.