Mdu quary protest 
மாவட்ட செய்திகள்

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி

கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிதாக 3 கல் குவாரிகளுக்கு அனுமதி அளித்திருப்பதாக குற்றம்சாட்டினர்.

Web Team

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லணை, அச்சங்குளம், தூம்பகுளம், புதிய நெடுங்குளம் மற்றும் உலகாணி ஆகிய 5 கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் பேரணியாக சென்ற பொதுமக்கள் கப்பலூர் சுங்கச் சாவடியில் இருந்து நடந்து பேரணியாக சென்றனர். கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிதாக 3 கல் குவாரிகளுக்கு அனுமதி அளித்திருப்பதாக குற்றம்சாட்டினர்.