கரூர் துயர சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆறு நாட்களாக 33 பேரிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.