Mdu deepam 
மாவட்ட செய்திகள்

மதுரை ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் மனு

மனிதர்கள் மனு அளித்தால் மனு குப்பையில் போய்விடும் என்பதால் கடவுள் வேடமிட்டு மனு அளித்ததாகவும் நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.

Web Team

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்படியான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் கடவுள் வேடமிட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குறவர் இன பெண்ணான வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்துள்ளதால் தங்களது உரிமையை கேட்பதாகவும், மனிதர்கள் மனு அளித்தால் மனு குப்பையில் போய்விடும் என்பதால் கடவுள் வேடமிட்டு மனு அளித்ததாகவும் நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.