நாகையில் நடுக்கடலில் விசைப்படகு மீனவர்களால் பைபர் படகு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து செருதூரில் 400க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் செருதூர் மீனவர் கிராமத்தில் இருந்து பைபர் படகில் சென்ற மீனவர்கள் மீது அக்கரைப்பேட்டை விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.