காஞ்சிபுரத்திலிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்ததால் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க காஞ்சிபுரத்தில் இருந்து ஐந்து பேருந்துகளில்,
தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்ட நிலையில், அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் போதிய இடம் இல்லாததால் அதிகாரிகள் தொண்டர்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.