TNJ Manpanai 
மாவட்ட செய்திகள்

திருக்கோடிக்காவலில் மண் பானை தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், திருக்கோடிக்காவல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மண்பாண்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Manigandan Raja

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், திருக்கோடிக்காவல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மண்பாண்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.