அன்வர் ராஜா சொன்னது போல அதிமுகவை முழுவதும் ஆக்கிரமித்து, அந்த இடத்தை நிரப்புவதே பாஜகவின் கனவு என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் புதிய கட்சிகளை பாஜக களத்தில் இறக்குவது வழக்கம் என்றும், இப்பொழுதும் அதே தந்திரத்தை புதுப்புது முயற்சிகளில் எடுத்துள்ளதாகவும் கூறினார்.