கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் நகராட்சி நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாக கூறி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீடுகள், கடைகளுக்கு சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடைந்தும் முறையாக இணைப்புகள் வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சாலை மற்றும் தெருவிளக்குகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.