CDL Protest 
மாவட்ட செய்திகள்

என்எல்சி தலைமை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், விவசாய சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.

Web Team

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அந்நிறுவன தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலம் வழங்கியவர்களுக்கு 2013ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின்படி நிரந்தர வேலை வழங்குதல், வாழ்வாதாரத்தை இழந்த குத்தகை விவசாயிகள், கூலித் தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், விவசாய சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.