19 
மாவட்ட செய்திகள்

நகரப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் தொல்லை.. மாடுகளை பிடித்துச்செல்ல பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் நகரப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பள்ளிமாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Srini Vasan

திருப்பத்தூர் நகரப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள், பள்ளிமாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

நகரின் மையப்பகுதியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி சாலையில் செல்வோரும் அச்சப்படுகின்றனர்.