Kanchipuram 
மாவட்ட செய்திகள்

அரக்கோணம்-வேலூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்... பத்து வருடங்களாக பட்டா வேண்டி அலைவதாக குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகுளம் பகுதியில் பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகுளம் பகுதியில் பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளைகுளம் பகுதியில் வசிக்கும் 70 குடும்பங்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மக்கள் பத்து ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர்.

பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள் காஞ்சிபுரம்- வேலூர் செல்லும் சாலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் கைக்குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.