புதுக்கோட்டையில் 
புதுக்கோட்டை

முதலமைச்சர் வருகையால் மக்கள் பூரிப்பு, போனஸாக நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டைக்கு வந்த முதலமைச்சரை தொண்டர்கள் உற்சாக மழையில் நனைய வைக்க, பதிலுக்கு அவரும் துளியும் குறைவின்றி பிளையிங் கிஸ்களை பறக்கவிட்டும், ஹேப்பி தீபாவளி கூறியும் தனது அதீத அன்பை வெளிப்படுத்தினார்.

Azhagiri Arumugam

நலத்திட்ட உதவிகள், புதிய பணிகளுக்கு அடிக்கல், முடிவுற்ற பணிகளுக்கு திறப்பு விழா என வந்த வேலையையும் குறித்தநேரத்தில் செய்து முடித்த முதலமைச்சர் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார்.

முதல்வர் ரோடு ஷோ

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், தவெக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து, தொண்டைமான் சீமையான புதுக்கோட்டைக்கு சாலை மார்க்கமாக சென்றவருக்கு மாவட்ட எல்லையான மாத்தூரிலும் ஏகபோக வரவேற்பிற்கு பஞ்சமில்லை.

அன்பு பரிமாற்றம்

அடுத்து, தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடியே ரோடு ஷோ சென்றார் முதலமைச்சர். கரகாட்டம், பலூன்கள், கொடிகளுடன் தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

அதேபோல் சாலையின் இருமருங்கிலும் கேட்ட தொண்டர்களின் சந்தோஷ சத்தம் ஒருபக்கம் மனதை நிறைக்க மறுபக்கம் அன்போடு சிலர் வேலை பரிசளித்ததோடு பிளையிங் கிஸ்களையும் பறக்கவிட்டனர். பதிலுக்கு, முதலமைச்சரும் பிளையிங் கிஸ்களையும் பறக்கவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

புதுக்கோட்டையில்

திட்டப் பணிகள் துவக்கம்

இதனிடையே, ’ஹேப்பி தீபாவளி’ என்ற தொண்டர்களின் குரலும் காதில் விழ, தனது குரல் பெரிய சத்தமாக கேட்காவிட்டாலும் ஹேப்பி தீபாவளி கூறினார் முதலமைச்சர்.

அது அங்கிருந்தவர்களின் மனதை குளிர்விக்க மற்றவர்களுக்கு நவம்பர் 8 தான் தீபாவளி, ஆனால் முதலமைச்சர் புதுக்கோட்டைக்கு வந்த நவம்பர் 2 தான் தங்களுக்கு தீபாவளி என சந்தோஷம் தெரிவித்தனர்.

தொண்டர்களின் இந்த துள்ளல் வைபிலேயே ரோ ஷோ சென்ற முதலமைச்சருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பயிர் வகைகள், முந்திரி மற்றும் தானிய வகைகளை பார்வையிட்ட அவர் 44 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

மக்களுடன் செல்ஃபி

மேலும், 11.72 கோடி ரூபாய் மதிப்பிலான 70 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார். பின்னர், பேருந்து நிலையத்திற்கு வெளியே காத்திருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்த அவர் மக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். மேலும், 104 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவிகள், டிராக்டர்கள், வேளாண் கருவிகள், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

உற்சாக வரவேற்பு

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று முதலமைச்சர் வழங்கியது நெகிழ வைத்தது. 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு வெளியே வந்தபோது ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே மக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். அதனையும் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதி அளித்தார்.