வடசென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
42 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட இடத்தில் மாநகராட்சி பூங்கா, வட்டாட்சியர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம் போன்றவை அமைந்திருக்கும் நிலையில்,
அப்பகுதியில் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகம் இருப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி உதவியுடன் நாய்களுக்கு ரேபிஸ்தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசியானது போடப்பட்டது.