PBL Love matter 
மாவட்ட செய்திகள்

முன்னாள் காதலனுடன்பெண் சென்றதால் ஆத்திரம்

அப்பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில் கணவனுடன் வாழ விருப்பமின்றி முன்னாள் காதலனான ஐயப்பனுடன் அவர் சென்றார்.

Web Team

பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் முன்னாள் காதலனுடன் பெண் சென்றதால் அவரது உறவினர்கள் காதலனின் டீக்கடையை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு தீபிகா என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பனை பதிவு திருமணம் செய்த நிலையில், அவரிடமிருந்து பெண்ணை பிரித்த குடும்பத்தினர் வேறொருவருடன் திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது. அப்பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறந்த நிலையில் கணவனுடன் வாழ விருப்பமின்றி முன்னாள் காதலனான ஐயப்பனுடன் அவர் சென்றார்.