Arakonam protest 
மாவட்ட செய்திகள்

மத்திய பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Manigandan Raja

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மத்திய பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பினர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது போராட்டக்காரர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.