RMD Temple inside water 
மாவட்ட செய்திகள்

முடிக் காணிக்கை செலுத்தும் பகுதிக்குள் புகுந்த மழைநீர்

தேங்கிய தண்ணீரை ஊழியர்கள் பக்கெட் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Web Team

டிட்வா புயல் எதிரொலியால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். வங்க கடலில் உருவான டிட்வா புயலால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள முடி காணிக்கை செலுத்தும் இடத்துக்குள் மழை நீர் புகுந்தது. தேங்கிய தண்ணீரை ஊழியர்கள் பக்கெட் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.