கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பூவாலை மேற்கு கிராமத்தில், சுமார் 750 ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பரவனாற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க வெள்ளப்பெருக்கால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக கவலை தெரிவித்த விவசாயிகள், பரவனாறு- அருவாமுக்கு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாக கூறிய விவசாயிகள், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.