ராமநாதபுரம்

வெறிச்சோடிய சரணாலயம், ஆயிரக்கணக்கில் வந்த பறவைகள் எங்கே?

வழக்கமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளின் வருகையால் களைகட்டும் சரணாலயம், இந்த ஆண்டு பறவைகளின் "கீச் கீச்" சத்தமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Azhagiri Arumugam

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் அருகே உள்ள தேத்தங்கால் பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வருகை தருவது வழக்கம்.

ரஷ்யா, சைபீரியா, ஈரான், ஈராக், மங்கோலியா, இலங்கை, கஜகஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், கருந்தலை அரிவாள் மூக்கன், புள்ளி அலகு வாத்து, நத்தை கொத்தி நாரை, செங்கால் நாரை, கரண்டி மூக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து தங்கும்.

வாரிசுகளுடன் தாயகத்திற்கு...

சரணாலயத்தில் உள்ள உயரமான மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, பின்னர் குஞ்சுகளுடன் தங்களது தாயகத்திற்குத் திரும்பிச் செல்வது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், வெளிநாட்டுப் பறவைகளின் வருகை முற்றிலும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பறவைகளின் சத்தம் இன்றி சரணாலய வளாகமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வீடியோவைக் காண...