Muslim marraiage 
மாவட்ட செய்திகள்

மும்மதத்தினர் முன்னிலையில் மதநல்லிணக்க திருமணம்..!

கோவையில் மும்மதத்தினர் முன்னிலையில் நடைபெற்ற மதநல்லிணக்க திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Web Team

கோவையில் மும்மதத்தினர் முன்னிலையில் நடைபெற்ற மதநல்லிணக்க திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கோவை கோட்டை மக்கள் நல்வாழ்வு மன்றம் சார்பில், போத்தனூர் பகுதியில் நடைபெற்ற விழாவில், திருச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த 6 இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

இதில் கோவை மாவட்ட அரசு தலைமை காஜி, அஷ்ட பைரவர் கோவில் பைரவர், சர்ச் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மணமக்களுக்கு 2 சவரன் தங்கம், ஸ்டீல் கட்டில், பீரோ, குக்கர், எவர் சில்வர் பொருட்கள், திருமண வேட்டி, சேலை, குர் ஆன் ஆகியவை வழங்கப்பட்டன.