கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரேணுகா பரமேஸ்வரி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.