Pudukkottai 
மாவட்ட செய்திகள்

மது அருந்தி விட்டு வந்து துன்புறுத்தியதாக தகவல்... உடற்கூராய்வு அறிக்கையால் போலீசில் சிக்கிய மனைவி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மது அருந்தி விட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவனை அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Web Team

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மது அருந்தி விட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவனை அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கார் ஓட்டுநரான பனையப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவரின் உடல் கடந்த 16 ஆம் தேதி தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில் காணப்பட்டது.

மனைவி தனலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கணவரை பிடித்து தள்ளிய போது,

அவர் சுவரில் பலமாக மோதி கீழே விழுந்தார் என தனலட்சுமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.