51 
மாவட்ட செய்திகள்

போதிய மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை.. அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிரமம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Srini Vasan

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.