TUT Road againsed protest 
மாவட்ட செய்திகள்

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் சாலை மறியல்

சாலை கனமழையால் சேதமடைந்ததால் அவ்வழியே செல்லக்கூடிய மாணவர்கள் விபத்து ஏற்படும் அபாயத்திலேயே பயணிப்பதாக குற்றம்சாட்டினர்.

Web Team

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே அன்னாள் நகரில் சேதமடைந்த சாலையை சரி செய்து தர வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அன்னாள் நகர் சாலை கனமழையால் சேதமடைந்ததால் அவ்வழியே செல்லக்கூடிய மாணவர்கள் விபத்து ஏற்படும் அபாயத்திலேயே பயணிப்பதாக குற்றம்சாட்டினர்.